உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் அரசியல் கட்சியில் இணையப்போகிறாரா விஷால்?

விஜய்யின் அரசியல் கட்சியில் இணையப்போகிறாரா விஷால்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். அதன் பிறகு அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷாலும் சமீபத்தில் மாணவ மாணவிகளை சந்தித்தார். அப்போது மாணவி ஒருவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் நீங்கள் இணைவீர்களா? என்று அவரை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு விஷால் கூறுகையில், எல்லாமே கடவுள் கையில் தான் உள்ளது. கடவுளின் முடிவு எதுவாக இருக்கிறதோ அதன்படி நான் செயல்படுவேன். மேலும், அரசியல் என்பது சமூக சேவை மட்டுமே வியாபாரம் அல்ல. நாம் அனைவருமே அரசியலுக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒருவருக்கு 50 ரூபாய் கொடுத்து உதவி செய்தால் கூட அவரும் அரசியல்வாதி தான் என்று அந்த மாணவியின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் விஷால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !