‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் வனிதாவின் மகள்
ADDED : 812 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வாழ்க்கை கொடுத்த இரண்டாவது வாய்ப்பில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார் வனிதா விஜயகுமார். நடிப்பு, பிசினஸ் என அதில் மட்டுமே தனது முழு கவனத்தை செலுத்தி வரும் வனிதா, தனது குழந்தைகளுக்கும் நல்ல தாயாக இருந்து வருகிறார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ள அவர் தனது மகள் ஜோவிகாவுடன் கலந்து கொண்டுள்ளார். நெடுநெடுவென பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட ஜோவிகா, குக் வித் கோமாளி சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பலரும் ஜோவிகா நடிக்க வருகிறாரா? அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடிக்கிறாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகின்றனர்.