பெண் சக்திக்கு எடுத்துக்காட்டு என்கிறார் அமலாபால்
ADDED : 810 days ago
நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது சினிமா வாழ்வில் ஒரு தொய்வான நிலையே போய் கொண்டிருக்கிறது. அதற்கு தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த பிரச்னைகள், ஏமாற்றங்களும் முக்கிய காரணம். இருந்தாலும் அதை பெரிதும் காட்டிக் கொள்ளாமல் படங்களில் நடிக்கிறார். தற்போது அவர் கைவசம் ஓரிரு படங்கள் மட்டுமே உள்ளன.
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்த அவர் சிலகாலம் அதனை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இன்ஸ்டா பக்கம் வந்துள்ளார். தொடர்ச்சியாக சில கிளாமரான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். இயற்கையின் பின்னணியில் சில போட்டோக்களை பகிர்ந்து, ‛‛இயல்பிலேயே போராளி. ஆனால் இதயத்தில் நான் கடவுள் மாதிரி. பெண் சக்திக்கு எடுத்துக்காட்டு,'' என பதிவிட்டுள்ளார்.