ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கிறாரா காயத்ரி?
18 வயசு, ரம்மி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், விக்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த மாமனிதன் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடித்த வேடம் ரசிகர்கள் மத்தியில் அவரை பேச வைத்தது.
இந்த நிலையில் தற்போது அரவிந்த் சா என்ற ஸ்டாண்ட் அப் காமெடியனை காயத்ரி காதலித்து வருவதாகவும், அவருடன் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதோடு அரவிந்த் சாவுடன் காயத்ரி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. என்றாலும், இந்த காதல் செய்தி குறித்து இதுவரை காயத்ரி எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கான விளக்கத்தை அவர் கொடுக்கும்போது தான் இந்த காதல் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவரும்.