உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25வது படம் : ஜி.வி.பிரகாஷின் மெகா திட்டம்

25வது படம் : ஜி.வி.பிரகாஷின் மெகா திட்டம்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக 100வது படத்தை எட்டியுள்ளார். அதேபோல், நடிகர் ஆக 25வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் சொந்தமாக தயாரிக்கிறார்.

இதற்கு முன்பு கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த ' மதயானைக்கூட்டம்' படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்திருந்தார் அதன் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து ஜி.வி. பிரகாஷ் பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஜி.வி. பிரகாஷின் 25வது படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார். இதனை மூன்று பாகங்களாக உருவாக்க தற்போதே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்குகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !