கயல் ஆனந்தி நடிக்கும் 'ஒயிட் ரோஸ்'
ADDED : 849 days ago
தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்க, அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் படத்திற்கு 'ஒயிட் ரோஸ்' என பெயரிட்டுள்ளனர். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகிறது.
இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும். இன்னும் பல முக்கிய நடிகர்களை இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார்.