அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் புஷ்பா 2
ADDED : 806 days ago
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படம் செம்மர கடத்தலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருந்தது. புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் உருவான ஸ்ரீ வள்ளி மற்றும் ஊ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அதே கூட்டணியில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திற்கு புஷ்பா தி ரூல் என்று டைட்டில் வைத்திருக்கும் இயக்குனர் சுகுமார், தற்போது 40 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.