உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி படத்தில் இணையும் நானி

ரஜினி படத்தில் இணையும் நானி

இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த படத்தில் 32 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 20 நிமிட காட்சிகளில் மட்டுமே இவர் வருவார் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !