மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
761 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
761 days ago
பேட்ட, மாஸ்டர், மாறன் படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் மலைவாழ் பெண்ணாக அவர் நடித்து இருக்கிறார். அது குறித்த போஸ்டர் ஒன்றை கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி அவரது 30வது பிறந்தநாளின் போது படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் மாளவிகா தற்போது நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்களை மாளவிகா பகிர்ந்துள்ளார். மற்றொரு பதிவில் ரெசார்ட் ஒன்றில் நீச்சல் குளம் அருகே பச்சை நிறத்திலான நீச்சல் உடையை அணிந்து ஸ்டைலாக கிளாஸ் அணிந்து, படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது, ஹாயாக உலா வருவது மாதிரியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ‛‛பச்சை நிறமே பச்சை நிறமே.... இச்சை மூட்டும் பச்சை நிறமே...'' என கவிதை வாசித்து வருகின்றனர்.
761 days ago
761 days ago