கிங் ஆப் கோதா படத்தின் டிரைலர் அப்டேட்
ADDED : 798 days ago
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கிங் ஆப் கோதா'. இதில் ஜஸ்வர்யா லஷ்மி, பிரசன்னா, ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் இப்படத்தின் பிஸ்னஸ் வேகமாக நடைபெற்று வருகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.