3 கோடி பார்வையாளர்களை கடந்த கேப்டன் மில்லர் டீசர்
ADDED : 790 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் கேப்டன் மில்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 23.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் மொழி டீசர் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் டீசர் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் தற்போது 3 கோடி பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்துள்ளதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.