தனுஷ் பாடிய பாடல் குறித்து அறிவித்த நண்பன் ஒருவன் வந்த பிறகு படக்குழு
ADDED : 838 days ago
ஹிப் ஹாப் ஆதியின் உதவி இயக்குனர் மற்றும் நடிகர் ஆனந்த் இயக்கி உள்ள படம் ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இந்த படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார் என சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தனர் . இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடல் குறித்து கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி, இப்பாடலுக்கு 'அழாதே' எனும் பெயரிட்டுள்ளனர். இது ஒரு முதல் காதல் பாடல் என்கிறார்கள். இப்பாடலை தனுஷூடன் இணைந்து விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம் விஷால் பாடியுள்ளார். இந்த பாடலை ஆர். ஜே. விஜய் எழுதியுள்ளார். இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் ஆன இப்படம் இந்த வருடத்தில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த பாடலை வெளியிட உள்ளனர்.