இமயமலை புறப்பட்டார் ரஜினி
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஆக.,10) தியேட்டரில் வெளியாகிறது.
சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ள ரஜினி, அங்கிருந்து தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை பயணிக்கிறார். ஒருவாரத்திற்கு மேல் அங்கு இருக்கும் ரஜினி அதன் பின்னர் தான் சென்னை திரும்ப உள்ளார்.