மகேஷ் பாபு பிறந்தநாளில் வெளியான போஸ்டர்
ADDED : 798 days ago
த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'குண்டூர் காரம்'. இப்படத்தில் லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிகா - ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு குண்டூர் காரம் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் அவரின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காலில் செருப்பு இல்லாமல் லுங்கி கட்டிக்கொண்டு ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து வாயில் சிகரெட்டை பிடித்தபடி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.