கோபிசந்துக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்
ADDED : 850 days ago
தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது கோபிசந்த் தனது 31வது படமான 'பீமா' என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னட இயக்குனர் ஷர்சா இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படத்தில் கோபிசந்துக்கு ஜோடியாக நடிகைகள் மாளவிகா சர்மா மற்றும் பிரியா பவானி சங்கர் என இருவரும் நடிக்கின்றனர். பிரியா பவானி சங்கர் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் இதுவாகும்.