பள்ளி நண்பர்களை சந்தித்த தனுஷ்
ADDED : 785 days ago
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் 11ம் வகுப்பு படிக்கும் போதே 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் இறங்கியதால் பள்ளி படிப்புடன் தனது கல்வி முடிவடைந்ததாக தனுஷே பல பேட்டிகளில் கூறினார். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தனுஷ் தனது பள்ளி நண்பர்களுக்காக ரீ - யூனியன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்களை சந்தித்துள்ளார். இதனை தனுஷின் நெருங்கிய நண்பர் குமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.