பைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
ADDED : 792 days ago
பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தற்போது வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் உடன் மீண்டும் இணைந்து 'பைட்டர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வியாகாம் 18 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் மற்றும் சேகர் இசையமைக்கின்றனர். 2024ம் ஆண்டு ஐனவரி 25ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 15) காலை 10 மணிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.