உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியத் திரையுலகத்தில் இது வசூல் வாரம்

இந்தியத் திரையுலகத்தில் இது வசூல் வாரம்

கொரோனா, ஓடிடி, அதிக டிக்கெட் கட்டணம் என இந்தியத் தியேட்டர்கள் கடந்த மூன்று வருடங்களாகக் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. விதிவிலக்காக ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல வசூலை பெற்றுத் தருகின்றன.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான சில படங்களால் இந்தியத் திரையுலகமும், தியேட்டர் உலகமும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் மட்டும் இந்திய அளவில் 390 கோடி ரூபாய் தியேட்டர்கள் மூலம் வசூலாகியுள்ளது. கடந்த 10 வருடங்களில் அதிக பட்சமாக சுமார் 2 கோடியே 10 லட்சம் பேர் தியேட்டர்களுக்கு வந்துள்ள வாரமாகவும் அமைந்துள்ளது. 100 வருடத் திரையுலகத்தில் தியேட்டர்களில் கிடைத்த இந்த வசூல் சாதனை வசூல் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

தமிழ்ப் படமான 'ஜெயிலர்', ஹிந்திப் படங்களான 'கடார் 2, ஓஎம்ஜி 2', தெலுங்குப் படமான 'போலா சங்கர்' உள்ளிட்ட படங்களின் மூலம் இந்த வசூல் சாதனை நிகழ்ந்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !