ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய ரஜினி
ADDED : 785 days ago
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் திரைக்கு வந்து வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. பட வெளியீட்டிற்கு முன்பாக இமயமலை புறப்பட்டு சென்றார் ரஜினி. சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ரஜினி அங்கிருந்து தனது நண்பர்களுடன் பயணத்தை துவக்கினார். ரிஷிகேஷில் சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்றவர் அங்குள்ள ரிஷிகளை சந்தித்தார். தொடர்ந்து பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார். இந்நிலையில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகளுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடினார்.