விஜய் படம் குறித்து மனம் திறந்த மோகன் ராஜா
ADDED : 798 days ago
இயக்குனர் மோகன் ராஜா கடந்த 2011ல் விஜய்யை வைத்து ' வேலாயுதம்' படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விஜய் புதிய படத்திற்கு கதை கேட்கும் போது மோகன் ராஜா பெயர் அடிபடும்.
சமீபத்தில் மோகன் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், வேலாயுதம் படத்திற்கு பிறகு விஜய்-க்கு இரட்டை வேடத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அந்த கதை அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் தடம் படம் வெளிவந்தது. தடம் படத்திற்கு நான் உருவாக்கிய கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. இப்போது அந்த கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். இது அல்லாமல் புதிதாக இரண்டு கதைகள் விஜய்க்கு தயார் செய்துள்ளேன். விரைவில் விஜய் உடன் இணைவேன்'' என தனது ஆசையை தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.