உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பைட்டர்' படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

‛பைட்டர்' படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் படம் 'பைட்டர்' . இதில் தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் மற்றும் சேகர் இசையமைக்கின்றனர்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(ஆக., 15) பைட்டர் படத்திலிருந்து ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் ஆகியோர் தோற்றத்தை ஒரு அறிமுக வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். மூவரும் இந்திய விமான படையில் பணியாற்றுவது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளதால் இது விமானபடை தொடர்பான கதையாக இருக்கலாம் என தெரிகிறது. இப்படம் 2024 ஜனவரி 25ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !