உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னடத்தில் தனது முதல் படத்திற்கு டப்பிங் பேசிய ஜெயராம்

கன்னடத்தில் தனது முதல் படத்திற்கு டப்பிங் பேசிய ஜெயராம்

நடிகர் ஜெயராமின் கடந்த நான்கு வருட கால திரையுலக பயணத்தை எடுத்துக் கொண்டால் அவரது சொந்த மொழியான மலையாளத்தை விட தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் இளம் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க அதிக அளவில் அவரை தேடி வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் முதன்முறையாக கன்னட திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ள ஜெயராம், நடிகர் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் கோஸ்ட் என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி மற்றும் அனுபம் கெர் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை எம்.ஜி ஸ்ரீனிவாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக தான் நடித்துள்ள கன்னட படத்திற்கு தானே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் ஜெயராம். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !