தனுஷ் 51வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
ADDED : 1053 days ago
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியானது . இது தனுஷின் 51வது படமாக உருவாகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் நடிப்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்தனர்.