உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜவான் படத்தின் தமிழக, கேரள உரிமை இத்தனை கோடியா?

ஜவான் படத்தின் தமிழக, கேரள உரிமை இத்தனை கோடியா?

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'ஜவான்'. தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ்க மற்றும் கேரளா தியேட்டர் உரிமையை பிரபல கேரளா விநியோக நிறுவனம் ரூ. 50 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் ஜவான் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிடுவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !