செப்., 15ல் ‛ரஜினி 170' துவங்குகிறது?
ADDED : 783 days ago
'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன், சர்வானந்த், பஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு 'வேட்டையன்' எனும் தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஆன்மிக பயணமாக ரஜினி இமயமலை சென்றுள்ளார். அவர் வந்ததும் ஓரிரு வாரம் ஓய்வெடுக்கும் ரஜினி அதன்பின் தனது 170 படத்தில் நடிக்க போகிறார்.