மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
748 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
748 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
748 days ago
கிரிக்கெட்டை பற்றி வருடத்திற்கு ஒரு படமாவது வந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வரும் படங்களின் எண்ணிக்கை வெகு குறைவுதான். அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கூமர் திரைப்படம் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவரின் போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படத்தில் அபிஷேக் பச்சன் கிரிக்கெட் கோச் ஆக நடித்துள்ளார். விபத்தில் தனது வலது கையை இழந்த ஒரு பெண், கிரிக்கெட்டில் சாதிக்க துடிப்பதையும் அவருக்கு எப்படி அபிஷேக் பச்சன் ஒரு கோச்சாக, பக்கபலமாக நின்று சாதிக்க உதவுகிறார் என்பதும்தான் இந்த படத்தின் கதை.
படம் வெளியானதில் இருந்தே பாசிட்டி விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான வீரேந்திர சேவக் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். “கிரிக்கெட்டை பற்றிய படங்கள் ரொம்பவே குறைவாகத்தான் வருகின்றன. அதனால் தான் இந்த படம் வெளியானதும் உடனடியாக பார்த்து விட்டேன். பொதுவாக நான் ஸ்பின்னர்களை பெரிதாக மதிப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் நாயகி ஸ்பின் பால் போடும்போது வியந்து போனேன்.
அதேபோல பயிற்சியின் போது கோச் சொல்லிக் கொடுப்பதையும் நான் பெரிதாக கவனிக்க மாட்டேன். ஆனால் இந்த படத்தில் ஒரு கோச்சாக தன் பக்கம் கவனத்தை திருப்பும்படி செய்துள்ளார் அபிஷேக் பச்சன். கிரிக்கெட் விரும்பிகள் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இவரது பாராட்டுக்கு அபிஷேக் பச்சன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
748 days ago
748 days ago
748 days ago