இசை ஆல்பத்தில் நடித்த ஸ்வாதி ரெட்டி
ADDED : 778 days ago
'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி, அதன்பிறகு கனிமொழி, போராளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை, திரி படங்களில் நடித்தார். 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. நடித்து முடித்துள்ள இரண்டு தெலுங்கு படங்களும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் அவர் சாய் தரம் தேஜூடன் 'சோல் ஆப் சத்யா' என்ற வீடியோ இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். 'சத்யாவின் ஆத்மா' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகி உள்ளது. இதனை விஜய கிருஷ்ணா இயக்கி உள்ளார். ஸ்ருதி ரஞ்சனி பாடி, இசையமைத்துள்ளார். ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி தயாரித்துள்ளனர். ராணுவ வீரரை மணந்து கொண்ட ஒரு கிராமத்து பெண்ணின் மனநிலையை சொல்லும் ஆல்பமாக இது உருவாகி உள்ளது.