வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் பொம்மி பிரகர்ஷிதா!
ADDED : 783 days ago
நடிகை பிரகர்ஷிதா 18 ஆண்டுகளுக்கு பின் சின்னத்திரையில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். அவர் நடிகை ராதிகா சரத்குமாருடன் 'தாயம்மா' என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தொடரானது பொதிகை சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திரையில் நடிக்க வரும் பிரகர்ஷிதா பிட்னஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்து வருகிறார். தற்போது அந்த வொர்க்-அவுட் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. பிரகர்ஷிதாவின் ரீசெண்ட் லுக்கை பார்க்கும் பலரும் அவரை சினிமாவிலும் ஹீரோயினாக நடிக்க சொல்லி கேட்டு வருகின்றனர்.