கடல் அழகா? கடற்கன்னி அழகா? ரச்சிதாவின் கியூட்டான புகைப்படங்கள் வைரல்
ADDED : 829 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமிக்கு ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என பட்டம் கொடுத்துள்ளனர். அந்த அளவுக்கு சின்னத்திரையின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ரச்சிதாவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவருக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் வாய்ப்புகள் பெரிதாக அமையாவிட்டாலும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் ரச்சிதா கடற்கரை மணலில் நின்று கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.