ஜெயம் ரவியின் 33வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
ADDED : 778 days ago
சைரன் படத்தை அடுத்து தற்போது சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2 படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 33வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் ரொமான்டிக் கதையில் உருவாகிறது.