குழந்தை வேணும், கல்யாணம் வேண்டாம் : அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி டிரைலர் வெளியீடு
நிசப்தம் படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை மகேஷ் பாபு என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா சமையல் கலை வல்லுனராகவும், நவீன் பொலிஷெட்டி ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் நடித்துள்ளார்கள். அடுத்த மாதம் 7-ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.