உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகளை சினிமாவில் இறக்கிவிடும் வனிதா விஜயகுமார்

மகளை சினிமாவில் இறக்கிவிடும் வனிதா விஜயகுமார்

விஜய் நடித்த சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு ராஜ்கிரணுடன் மாணிக்கம் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் வனிதா, தன்னுடைய 18 வயது மகள் ஜோவிகாவை சினிமாவில் இறக்கி விடுவதற்கு தயாராகி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், என்னுடைய மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பதற்காக நல்ல கதைகளை தேடி வருகிறேன். எந்த ஹீரோவுடன் அறிமுகமாவது என்பதை விட, அவருக்கு நல்ல கதாபாத்திரம் உள்ள கதைகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளேன். அதனால் வெகு விரைவிலேயே ஜோவிகா அறிமுகம் படம் குறித்து தகவல் வெளியாகும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதோடு, பாலிவுட் சினிமாவின் தீபிகா படுகோனே, பிரீத்தி ஜிந்தா, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பு பயிற்சி பெற்ற அனுபம் கேரின் நடிப்பு பயிற்சி பள்ளியில் ஒரு வருடம் தனது மகள் ஜோவிகா நடிப்பு பயிற்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !