உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ படம் குறித்து பகிர்ந்த தயாரிப்பாளர்

லியோ படம் குறித்து பகிர்ந்த தயாரிப்பாளர்

‛மாநகரம், கைதி, விக்ரம்' என தொடர் வெற்றி படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'லியோ'. இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தை குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் லியோ படத்தில் தான் அவரது நடிப்பு உச்சமாக இருக்கும். குறிப்பாக இதன் இடைவேளைக்கு முந்தைய 8 நிமிட காட்சிகள் வேறலெவலில் இருக்கும் என பகிர்ந்துள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !