உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்றாவது முறையாக கார்த்தி உடன் இணைந்த ராஜ்கிரண்

மூன்றாவது முறையாக கார்த்தி உடன் இணைந்த ராஜ்கிரண்

நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் இணைந்ததை தொடர்ந்து இப்போது நடிகர் ராஜ்கிரண் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கொம்பன், விருமன் ஆகிய படங்களில் கார்த்தி உடன் இணைந்து ராஜ்கிரண் நடித்தார். தற்போது மூன்றாவது முறையாக கார்த்தி உடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !