லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோவா?
ADDED : 746 days ago
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் வைத்து 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவித்தனர் ஆனால், இப்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ரஜினி நடித்த காட்சிகள் இடம் பெறும் என்கிறார்கள் .