தள்ளிப்போன விமல் படம்
ADDED : 785 days ago
காத்திருப்போர் பட்டியல் பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இதில் மிஷா நரங், சதீஷ், சவுந்தர ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். விமல் இதில் யூடியூபர் வெற்றி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். தற்போது ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் இப்படம் சற்று தள்ளி சென்று செப்டம்பர் 1ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.