நித்யா மேனனுக்கு மலையாள நடிகருடன் திருமணமா?
ADDED : 779 days ago
தமிழ் சினிமாவில் ‛வெப்பம்' என்ற படத்தில் அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பிறகு ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா- 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நித்யாமேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் தனது பள்ளிப் பருவத்து நண்பரை சில ஆண்டுகளாக நித்யா மேனன் காதலித்து வருகிறாராம். அவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் கொடுத்து விட்டதால் விரைவில் நித்யாமேனனின் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் இந்த தகவலை இதுவரை நித்யா மேனன் உறுதிப்படுத்தவில்லை.