ரஜினிகாந்த் 170, இன்று ஆரம்ப விழா
ADDED : 873 days ago
'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அடுத்து ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது.
'ஜெயிலர், லால்சலாம்' படங்களில் ரஜினி நடித்து முடித்த பிறகு இந்தப் படம் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அந்த இரண்டு படங்களையும் முடித்த பின் ரஜினிகாந்த் மாலத் தீவிற்கும், இமயமலைக்கும் ஓய்வெடுக்கச் சென்றார்.
இன்று காலை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படத்திற்கான பூஜை நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.