கிச்சா சுதீப்பின் 47வது படத்தை இயக்கும் சேரன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!
ADDED : 810 days ago
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக 2019ம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் 47வது படத்தை இயக்கப் போகிறார் சேரன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பினை ஒரு போஸ்டர் மூலம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் கத்தியுடன் உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் அமர்ந்திருக்கிறார் கிச்சா சுதீப். இப்படத்தின் இடம்பெறும் மற்ற நடிகர்- நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.