இரண்டு நாளில் 51 கோடி வசூலித்த 'குஷி'
ADDED : 763 days ago
ஷிவா நிர்வானா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 'குஷி'. இப்படம் முதல் நாளில் 30 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இரண்டாவது நாளில் மேலும் 21 கோடி வசூலித்து தற்போது 51 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. தமிழகத்தில் 'ஏ' சென்டர்களில் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் வாரம் ஷாரூக்கான் நடித்துள்ள 'ஜவான்' படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதால் அதற்குள் 'குஷி' படம் வசூலித்தால்தான் உண்டு. இன்னும் 25 கோடி வரை வசூலித்தால் மட்டுமே படம் லாபத்தைக் கொடுக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.