மார்க் ஆண்டனி படத்தின் டிரைலரை வெளியிடும் கார்த்தி, ராணா!
ADDED : 763 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் இன்று (செப்டம்பர் 3) காலை வெளியாகும் என அறிவித்தனர் ஆனால், ஒரு சில காரணங்களால் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. டிரைலரை தமிழில் நடிகர் கார்த்தி, தெலுங்கில் நடிகர் ராணா டகுபதி வெளியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர்.