உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ஸ் சித்தார்த்தை சந்தித்த ஜெனிலியா!

20 ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ஸ் சித்தார்த்தை சந்தித்த ஜெனிலியா!

கடந்த 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் - ஜெனிலியா இணைந்து நடித்த படம் பாய்ஸ். இந்த படம் திரைக்கு வந்து கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி கன்னட நடிகர் கிச்சா சுதீப் தனது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாடிய போது, அந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார் ஜெனிலியா. இந்த நிகழ்ச்சியில் சித்தார்த்தும் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் தங்களது மலரும் நினைவுகளாக மேடையில் பாடி அசத்தியுள்ளார் சித்தார்த். அந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஜெனிலியா, என்னுடைய முன்னாவை 20 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !