பெருமைப்படும் தருணம் : ஐஸ்வர்யா ரஜினி
ADDED : 778 days ago
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இனி தனி தனியாக வாழ்க்கையை தொடர போவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் அப்பா, அம்மா என இருவருடனும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.
நேற்று ஐஸ்வர்யா தனது தங்கை சவுந்தர்யாவின் மகன் பிறந்தநாளை குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். இதில் ஐஸ்வர்யா உடன் யாத்ரா, லிங்கா என இருவரும் கலந்து கொண்டனர். மூத்த மகனின் போட்டோ பதிவிட்டு, ‛ஒரு நாள் உங்கள் மகனை நிமிர்ந்து பார்த்து என்ன செய்தீர்கள் என்பதை நினைத்து பெருமைப்படும் தருணம்' என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த போட்டோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.