திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த ஷாரூக்கான் - நயன்தாரா
ADDED : 809 days ago
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். இந்த படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் ஷாரூக்கான், நடிகை நயன்தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். ஷாரூக்கான் தனது மகள் சுகானாவுடனும், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடனும் இந்த தரிசனத்தில் கலந்து கொண்டு உள்ளார்கள். நேற்று இரவு திருப்பதிக்கு சென்று அவர்கள் அங்கு தங்கி இருந்து இன்று காலை சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்துள்ளார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலுக்கு தற்போது முதல் முறையாக சென்றுள்ள ஷாரூக்கான் வேஷ்டி - சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.