உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைமா திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் கமல்

சைமா திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் கமல்

விக்ரம் படத்தை அடுத்து ஷங்கர் இயக்கி உள்ள இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் கமல்ஹாசன் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்தபடியே சென்னையில் நடைபெற்ற ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு பட குழுவை வாழ்த்தினார். அதோடு அமெரிக்காவில் உள்ள கடற்கரையில் தான் நடந்து செல்லும் புகைப்படங்கள், கடற்கரையில் இருந்தபடியே கேமராவில் புகைப்படம் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்த கமல், அடுத்து அங்கிருந்தபடியே சீனா செல்லவிருக்கிறார். அதன் பிறகு செப்டம்பர் 16ம் தேதி துபாயில் நடைபெறும் சைமா திரைப்பட விழாவில் கலந்து கொள்ள போகிறார். அந்த விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !