மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
752 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
752 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
752 days ago
மறைந்த நடிகரும், இயக்குனருமான மாரிமுத்துவின் உடல், அவரது சொந்த ஊரான வருஷநாடு அருகே உள்ள பசுமலைதேரியில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
தேனியை சேர்ந்த மாரிமுத்து உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, பின்னர் இயக்குனராக களமிறங்கி, அதன்பின் நடிகராக அசத்தி வந்தார். யுத்தம் செய், கொம்பன், மருது, திருநாள், பைரவா, மகளிர் மட்டும், மதுர வீரன், எனிமி, பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம், மிஸ்டர் லோக்கல், புலிகுத்தி பாண்டி, சுல்தான், விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டி வந்த இவர், அந்த கேரக்டரால் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். நேற்று இந்த பட சீரியலுக்காக டப்பிங் செய்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட, மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார். ரஜினி, கமல், விஷால், கார்த்தி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர் அவரது சொந்த ஊரான தேனி, வருஷநாடு அருகே உள்ள பசுமலைதேரி என்ற ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கும், விமல் உள்ளிட்ட சில நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அவரது ஊரில் உள்ள மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
மாரிமுத்துவாக சினிமாவில் அறிமுகமானாலும் ஆதி குணசேகரனாக தமிழக மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.
752 days ago
752 days ago
752 days ago