உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்.,15ல் மீண்டும் ஒரு கொடூர வில்லனாக விநாயகனின் தரிசனம்

செப்.,15ல் மீண்டும் ஒரு கொடூர வில்லனாக விநாயகனின் தரிசனம்

கடந்த மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு டப் கொடுக்கும் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகர் விநாயகன். பல வருடங்களுக்கு முன்பு திமிரு படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகி தனது வித்தியாசமான தோற்றத்தாலும் நடிப்பாலும் வசனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் தான். பல வருடங்களுக்குப் பிறகு ஜெயிலர் அவருக்கு தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் நடிப்பதற்கான ஒரு புதிய பாதையை போட்டு தந்துள்ளது என கூறலாம்.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள காசர்கோல்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார் விநாயகன். இந்த படத்தில் கதாநாயகனாக ஆசிப் அலி நடிக்க, மிருதுள் நாயர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் உருவாகி இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த படத்திலும் இன்னொரு கொடூரமான அதேசமயம் கோட் சூட் போட்டு ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !