சிரஞ்சீவியின் 157வது படத்தின் பணி துவங்கியது
ADDED : 762 days ago
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் சிரஞ்சீவி. நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, காட்பாதர், வால்டர் வீரய்யா, போலோ சங்கர் என அனைத்து படங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அவரது 157வது படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த படத்தை யுவி கிரியேஷன் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத் உப்பளபதி தயாரிக்கிறார்கள். வசிஷ்டா இயக்குகிறார். சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை மெகா157 என்ற தற்காலிக தலைப்புடன் படத்தின் பணிகள் தொடங்கி உள்ளன. படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.