மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
726 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
726 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
726 days ago
இந்தியத் திரையுலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் திரைப்படங்கள் 500 கோடி வசூல் என்ற இலக்கை எட்ட ஆரம்பித்தது. முதலில் ஆமீர்கான் நடித்து 2016ல் வெளிவந்த 'டங்கல்' ஹிந்திப் படம்தான் அந்த சாதனையைப் படைத்தது. அப்படம் உலக அளவில் மொத்தமாக 2000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதற்கடுத்து 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' தெலுங்குப் படம் 1800 கோடி வரை வசூலித்தது. 1500 கோடி வசூலைக் கடந்த படங்கள் என அந்த இரண்டு படங்கள் மட்டுமே டாப் பட்டியலில் இருக்கின்றன.
அதற்கடுத்து 1000 கோடியைக் கடந்த படங்களாக, 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படம் 1300 கோடியையும், 'கேஜிஎப் 2' தெலுங்குப் படம் 1200 கோடியையும் வசூலித்தன.
'டங்கல்' படத்திற்குப் பிறகு அதிக வசூலைக் குவித்து 1000 கோடி வசூலைக் கடந்த ஹிந்திப் படமாக ஷாரூக் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த 'பதான்' படம் இருந்தது. 1000 கோடி வசூல் சாதனையை அடுத்து ஒரு ஹிந்திப் படம் படைக்க 7 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
500 கோடி வசூலைக் கடந்த படங்களாக 'பஜ்ரங்கி பைஜான், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பிகே, கடார் 2, சுல்தான், சஞ்சு, பத்மாவத், டைகர் ஜிந்தா ஹை, தூம் 3, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் உள்ளன.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தமிழ்ப் படமான '2.0' மற்றும் 'ஜெயிலர்' ஆகிய படங்கள் 600 கோடி வசூலையும், ராஜமவுலியின் தெலுங்குப் படமான 'பாகுபலி' படத்தின் முதல் பாகமும் 600 கோடி வசூலைக் கடந்தன.
500 கோடி வசூலைக் கடந்த இந்தியத் திரைப்படங்களில் 19வது படமாக 'ஜவான்' படம் இணைந்துள்ளது. இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 1000 கோடியைக் கடக்குமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியும்.
726 days ago
726 days ago
726 days ago