உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பர் 21ம் தேதி 5 மொழிகளில் வெளியாகும் நானி படம்

டிசம்பர் 21ம் தேதி 5 மொழிகளில் வெளியாகும் நானி படம்

தெலுங்கு முன்னணி நடிகரான நானி நடித்து வரும் பான் இந்தியா படம் 'ஹாய் நான்னா'. நானி ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். பேபி கியாரா கண்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சவுர்யவ் இயக்குகிறார். படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், சானு ஜான் வர்க்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகன் செருகுரி, டாக்டர் விஜயேந்திர ரெட்டி தயாரிக்கிறார்கள்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வருகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !